புரட்டாசி மாத பெளர்ணமி: சதுரகிரி மலைக் கோயிலில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்!!

விருதுநகர்: புரட்டாசி மாத பௌர்ணமியையொட்டி சதுரகிரி மலைக் கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் இன்று புரட்டாசி மாத பெளர்ணமியை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலை மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், மிலாடி நபி விடுமுறை தினம் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

குறிப்பாக, காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் கோயில் மலைப்பகுதியில் இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வாகனங்கள் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் தாணிப்பாறை விளக்கு பகுதியில் நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் அங்கிருந்து நடந்து வரும் சூழ்நிலை ஏற்பட்டது.

The post புரட்டாசி மாத பெளர்ணமி: சதுரகிரி மலைக் கோயிலில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்!! appeared first on Dinakaran.

Related Stories: