திருத்துறைப்பூண்டியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் முகம் தெரியாத நபர்களை இணையத்தில் நண்பர்களாக்கி கொள்ள வேண்டாம்-ஏடிஎஸ்பி அறிவுறுத்தல்

திருத்துறைப்பூண்டி : முகம் தெரியாத நபர்களை இணையத்தில் நண்பர்களாக்கி கொள்ள  வேண்டாம் என திருத்துறைப்பூண்டியில் நடந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் ஏடிஎஸ்பி அறிவுறுத்தினார். திருத்துறைப்பூண்டியில் திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம், திருத்துறைப்பூண்டி காவல்துறை சார்பில் அனைத்து துறை ஒய்வூதியர் சங்கம் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.சைபர் கிரைம் ஏடிஎஸ்பி கணேசன் தலைமை வகித்தார், அனைத்து துறை ஒய்வூதியர் சங்க மாநிலதலைவர் குரு சந்திரசேகரன், வட்ட தலைவர் ஜெயவீரன் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில்சைபர்கிரைம் ஏடிஎஸ்பி கணேசன் பேசுகையில்,சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து 155260 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால் உடனடியாக சைபர் கிரைம் போலீசார் அங்குவந்து உதவி செய்வார்கள். எப்போதும் உங்கள் ஆதார்கார்டு சிசிவி எண்ணை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும் எவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்,உங்கள் ஏடிஎம் ரகசிய குறியீடு எண்ணை கடன் பற்று அட்டைமீது எழுதி  வைக்க வேண்டாம், இணையத்திலோ அலைபேசியிலோ உங்களது சுய விவரங்களை எவரேனும் கேட்டால் பகிர்ந்து கொள்ள வேண்டாம், முகம் தெரியாத நபர்களை இணையத்தில் நண்பர்களாக்கி கொள்ள வேண்டாம்,அறிமுகமில்லாத நபர்களிடம் இருந்து வரும் மின்னஞ்சல்களையோ (அ) குறுஞ்செய்திகளையோ திறந்து பார்க்க வேண்டாம். அதில் உங்கள் தகவல்களை திருடும் வைரஸ்கள் அடங்கி இருக்கலாம்,இணையத்தில் சலுகை விலையில் பொருட்கள் வாங்கும் போது கவனமாக இருங்கள் அவை போலியானவையாக கூட இருக்கலாம் என்றார். இதில்  டிஎஸ்பி சோமசுந்தரம் இன்ஸ்பெக்டர் கழனியப்பன்,சைபர் கிரைம்  இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, எஸ்.ஐ.கணபதி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர்  இளங்கிள்ளிவளவன், எஸ்ஐ நாகராஜன் மற்றும் காவல்துறையினர், அனைத்து துறை  ஒய்வூதியர் சங்கத்தினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது….

The post திருத்துறைப்பூண்டியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் முகம் தெரியாத நபர்களை இணையத்தில் நண்பர்களாக்கி கொள்ள வேண்டாம்-ஏடிஎஸ்பி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: