திருச்சியில் தெருக்கள் மற்றும் சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிந்தால் ரூ.10,000 அபராதம்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

திருச்சி: திருச்சியில் தெருக்கள் மற்றும் சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிந்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். கால்நடைகளை பிடித்து செல்வதுடன் முதல் முறையாக ரூ.10,000-மும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார். அபராதத்தை 3 நாளில் செலுத்தி கால்நடைகளை உரிமையாளர்கள் பெறவில்லை என்றால் சந்தையில் விற்பனை செய்யப்படும் என கூறினார். தெருக்கள், சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்களுக்கும், பொது சுகாதாரத்திற்கும் சீர்கேடு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் மாடு, குதிரை போன்ற கால்நடைகளால் போக்குவரத்து கடும் இடையூறு ஏற்படுகிறது. சாலைகளில் திரியும் கால்நடைகளால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, நகராட்சி நிர்வாகம் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் கால்நடை உரிமையாளர்கள் கேட்பதாக இல்லை. இதையடுத்து  மாடு, குதிரை போன்ற வீடுகளில் கட்டிவைத்து பராமரிக்காமல் சாலைகளில் அவிழ்த்துவிடப்படும் கால்நடைகள் கோசாலைகளில் அடைக்கப்படும் என கூறினார். மேலும் கால்நடைகளை அவிழ்த்துவிடும் உரிமையாளர்களுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என திருச்சி மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் சாலைகளில் திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணிகள் தொடங்கும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார். …

The post திருச்சியில் தெருக்கள் மற்றும் சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிந்தால் ரூ.10,000 அபராதம்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: