திமுக ஆட்சியில் வறுமை குறைந்துள்ளது: சாத்தூர் ராமசந்திரன் பேச்சு

 

ராமநாதபுரம், அக்.23: ராமநாதபுரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன் பேசுகையில், கலைஞர் தான் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் ஏழைகளுக்காகத்தான் செய்தார். அந்த வழியில் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் எண்ணற்ற திட்டங்களை ஏழைகள் பயன்பெறும் வகையில் செய்து வருகின்றார். 1977 ஆண்டுகளில் வறுமை அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலைமாறி தற்போது திமுக ஆட்சியில் வறுமை குறைந்துள்ளது.

ஏழைகள் வாழ வேண்டும் ஏழைகள் சிறப்போடு இருக்க வேண்டும் ஏழை உயர்ந்தால் தான் நாட்டின் பொருளாதார நிலை உயர்வடையும். ஒரு கிராமத்தில் கூலித்தொழிலாளி இருந்தால் அவர் முன்னேற்றம் இருந்தால்தான் அந்த கிராமம் முன்னேற்றம் அடைந்ததாக அர்த்தம். முதலமைச்சர் அறிவித்த உன்னதமான திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் பெண்கள் சுயமரியாதையுடன் வாழ தொடங்கியுள்ளனர்.

அவர்களுடைய பொருளாதார நிலையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த முறையை மாற்றி தற்போது மனிதனை பொருளாதார ரீதியாக அனைத்து வகையில் முன்னேறிடும் வகையில் திட்டங்களை வகுத்துக் கொடுத்தவர் கலைஞர் ஆவார். நடுத்தர மக்களை உயர்ந்த இடத்திற்கு வருவதற்கு உரிய திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வெற்றி கண்டவர்கள் அண்ணா, கலைஞர் வழியில் முதலமைச்சர் ஆவார். இந்த சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய பணிகளை கலைஞர் வழிகளை பின்பற்றி செயலாற்றுவோம் என தெரிவித்தார்.

The post திமுக ஆட்சியில் வறுமை குறைந்துள்ளது: சாத்தூர் ராமசந்திரன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: