திண்டுக்கல், ஜூன் 16: திண்டுக்கல் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் குரூப் 1ஏ முதல்நிலை போட்டி தேர்வினை 4,836 பேர் எழுதினர் என கலெக்டர் சரவணன் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் குரூப் 1ஏ முதல்நிலை போட்டி தேர்வு நடைபெற்றது. திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் கலெக்டர் சரவணன் பார்வையிட்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது: டிஎன்பிஎஸ்சி குரூப்-1 மற்றும் குரூப் 1ஏ தேர்வு நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 6,448 நபர்கள் தேர்வு எழுதுவதற்காக 15 இடங்களில் 25 அறைகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களில் 4,836 நபர்கள் தேர்வு எழுதினர். 1,612 நபர்கள் தேர்வு எழுதவில்லை. இத்தேர்வினை கண்காணிக்க மொத்தம் 7 நடமாடும் குழுக்கள், 2 பறக்கும் படை, 26 வீடியோ ஒளிப்பதிவாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் தேர்வர்கள் எவ்வித சிரமமின்றி தேர்வு எழுதுவதற்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இவ்வாறு தெரிவித்தார்.
The post திண்டுக்கல் மாவட்டத்தில் குரூப் 1, குரூப் 1 ஏ தேர்வை 4,836 பேர் எழுதினார் appeared first on Dinakaran.
