திண்டுக்கல்லில் பலு பாகற்காய் பலே விற்பனை

திண்டுக்கல்: மார்ச், ஏப்ரல் மாதங்களில் அதிக அளவில் திண்டுக்கல், குட்டத்து ஆவாரம்பட்டி, வடமதுரை, அய்யலூர், சிறுமலை,மம்மானியூர், கொம்பேரிபட்டி போன்ற மலைப்பகுதிகளில் அதிக அளவில் மருத்துவ குணம் வாய்ந்த பலு பாகற்காய் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பலு பாகற்காய் சமைப்பதற்கு கரி போன்ற சுவையுள்ளதால் அதிக அளவு பொதுமக்கள் விரும்பக்கூடிய காயாக உள்ளது. இருப்பினும் இது குறிப்பிட்ட கோடைகலத்தில் மட்டுமே கிடைப்பதால் இதன் விலை கிலோ 160 ரூபாயிலிருந்து 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. அதிகமாக சர்க்கரை நோயாளிகள் மற்றும் செரிமான சக்தி குறைவு உள்ள நபர்கள் உண்பதற்கு ஏற்ற மருத்துவ குணம் கொண்டு இருப்பதால் ஏராளமானோர் ஆர்வமுடன் வாங்குகின்றனர். வருடத்தில் ஒரு சில மாதங்கள் மட்டுமே கிடைக்கும் இந்த பலு பாகற்காய் தற்போது திண்டுக்கல் நகரில் நேற்று பெரியகடைவீதி வெள்ளை விநாயகர் கோவில் காந்தி காய்கறி மார்க்கெட் போன்ற பகுதிகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இதை ஆர்வமுடன் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர் குறைந்த அளவு விவசாயம் பொருளாக பழு பாகற்காய் இருப்பதால் அதிக மருத்துவ குணம் இருப்பதால் விலை சற்று அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.  மருத்துவ குணம் கொண்ட பலு பாகற்காய் வெயிலின் தாக்கத்தை குறைத்துக் கொள்வதற்கும் உணவில் சேர்த்துக் கொள்வதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்….

The post திண்டுக்கல்லில் பலு பாகற்காய் பலே விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: