திசையன்விளையில் பிரசித்திபெற்ற சுடலை ஆண்டவர் கோயில் கொடை விழா இன்று துவக்கம்

திசையன்விளை,ஆக.18: நெல்லை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற திசையன்விளை வடக்குத் தெரு சுடலை ஆண்டவர் கோயில் கொடை விழா ஆண்டுதோறும் ஆவணி மாதம் வெகுவிமர்சையாக நடந்துவருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான கோயில் கொடை விழா இன்று (18ம் தேதி) காலை 8 மணிக்கு கணபதி பூஜையுடன் துவங்குகிறது. இதையொட்டி காலை 8.45 மணிக்கு பள்ளி மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி நடக்கிறது. மாலை 3 மணிக்கு புள்ளி மற்றும் ரங்கோலி கலர் கோலப்போட்டி நடக்கிறது. மாலை 5 மணிக்கு மெய்ப்பொருள் விளக்கம் என்ற தலைப்பில் மனவள கலை மன்ற ஆசிரியர் அந்தோனி வழங்கும் சமய சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். இரவு 7 மணிக்கு ஆர்.ஜி. பாலன் வழங்கும் பள்ளி மாணவ, மாணவிகளின் புதுமை மற்றும் பல்சுவை கலைப்போட்டி, தொடர்ந்து சுடலை ஆண்டவர் இந்து டிரைவர்கள் மற்றும் சுடர் தூயவன் எழுச்சி மன்றத்தினர் இணைந்து வழங்கும் இன்னிசை கச்சேரி நடக்கிறது.

நாளை (19ம் தேதி) அதிகாலை 1.30 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெறும். க்கிறது. இதைத்தொடர்ந்து நாளை காலை 9 மணிக்கு பள்ளி மாணவ- மாணவிகளுக்கான கம்ப்யூட்டர் போட்டி நடக்கிறது. மாலை 5 மணிக்கு முழு முதற் கடவுள் என்ற தலைப்பில் தமிழ் ஆசிரியர் முத்துசெல்வி வழங்கும் சமய சொற்பொழி, 6 மணிக்கு சுடலை ஆண்டவர் மகளிர் சேவா சங்கம் சார்பில் சுமங்கலி பூஜை, இரவு 7 மணிக்கு மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி, தொடர்ந்து சுடலை ஆண்டவர் கலா மன்றம் சார்பில் மனம் தேடுதே உன்னை என்ற தலைப்பில் நாடகம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சேம்பர் செல்வராஜ் மற்றும் வரிதாரர்கள் செய்துள்ளனர்.

The post திசையன்விளையில் பிரசித்திபெற்ற சுடலை ஆண்டவர் கோயில் கொடை விழா இன்று துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: