ஆனால், நாம் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை முறைப்படுத்துதல் வேண்டும். இல்லையெனில் நாம் செயற்கை நுண்ணறிவிற்கு அடிமையாக நேரிடும். எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு ஆசிரியர், மருத்துவர், பொறியாளர் போன்ற பல பணிகளுக்கு மாற்றாக அமையும். ஆனால், மக்கள் பிரதிநிதித்துவ பணிகளை அதனால் செய்ய இயலாது. எதிர்காலத்தில் எந்த துறையை தேர்ந்தெடுக்கிறோம் என்பதில் கவனம் கொள்ள வேண்டும்.
எனவே, ஒருவர் தலைமை பண்பு உடையவராகவும் முடிவுகள் எடுக்கும் திறன் உடையவராகவும் தோல்விகளை எதிர்கொள்ளும் தைரியம் உடையவராகவும் இருப்பது மட்டுமே அவரை பணியில் நிலைத்திருக்க செய்யும். ஆசிரியர்கள் மாணவர்கள் தங்கள் வாழ்வில் முன்னேற அனைத்து வழிகளிலும் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்றார். நிகழ்ச்சியில் கவுரவ விருந்தினராக பங்கேற்ற பாஷ் டெக்னாலஜி இணைய இணைப்பு நிறுவனத்தின் தொழில் நுட்ப பிரிவு தலைவர் குரு பிரசாத் பேசுகையில், ‘‘தொழில் துறையினர் மாணவர்களிடம் இருந்து திறன்களை காட்டிலும் தொழில் மீதான ஈடுபாட்டினை எதிர்பார்க்கின்றனர்.
மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் சிறிய வாய்ப்பை கூட முழு ஈடுபாட்டுடன் பயன்படுத்தினால் தான் வாழ்வில் அடுத்த நிலைக்கு செல்ல முடியும்” என்றார். இந்த தொடக்க விழாவில், விஐடி சென்னையின் இணை துணைவேந்தர் முனைவர் டி.தியாகராஜன், வேந்தரின் ஆலோசகர் முனைவர் எஸ்.பி.தியாகராஜன், மாணவர் நலன் இயக்குநர் ராஜசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மூன்று நாட்கள் கோலாகலமாக நடைபெறும் இந்த தொழில்நுட்ப விழாவில் ‘செயற்கை நுண்ணறிவும் நிலையான வளர்ச்சியும்,’ என்ற தலைப்பில் 250-க்கும் மேற்பட்ட நிகழ்வுகளும் போட்டிகளும் நடைபெற உள்ளது. இவ்விழாவில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர். ஜப்பான், மலேசியா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்களும் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் டெக்னோ விஐடி 24 தொடக்கம் appeared first on Dinakaran.