தமிழ் வழி கல்விச்சான்று வழங்க மாணவனிடம் ரூ.100 லஞ்சம் கேட்கும் அரசு பள்ளி தலைமையாசிரியர்: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

கும்மிடிப்பூண்டி: தமிழ் வழியில் கல்விச்சான்று வழங்க மாணவனிடம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ரூ.100 லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் – தலையாரிபாளையம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் எளாவூர், சுண்ணாம்புகுளம், மெதிபாளையம், பெரிய ஒபுளாபுரம், கும்புளி, ஏடூர், கண்ணம்பாக்கம், நரசிங்கபுரம், மேலக்கழனி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த  500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி படித்து வருகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியராக கும்மிடிப்பூண்டி காந்தி நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன்(54) என்பவர் சில மாதங்களாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, அம்பத்தூர், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாட்ஸ்அப் குழுக்களில் தலையாரிபாளையம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் மற்றும்  ஒரு மாணவர் இருவருக்கிடையே  பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் தலைமையாசிரியர் வெங்கடேசனிடம் அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவன் டிஎன்பிசி தேர்வில் வெற்றிபெற தமிழ் வழி கல்விச் சான்றிதழ் வழங்குமாறு கேட்டுள்ளார்.  அதற்கு தலைமையாசிரியர் வெங்கடேசன் ரூ.100  லஞ்சம் கேட்பது பதிவாகியுள்ளது. மேலும், மாணவன், கொண்டு வந்த படிவத்தில் தமிழ் வழி கல்விச் சான்றிதழ் கொடுக்குமாறு வலியுறுத்தியும், தலைமையாசிரியர் தன்னுடைய பள்ளியில் உள்ள சான்றிதழை தான் தர முடியும் மற்ற சான்றிதழை தரமுடியாது என கூறியதும் வாட்ஸ்அப்  குழுக்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை மாவட்ட கல்வி அலுவலர் நேரில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post தமிழ் வழி கல்விச்சான்று வழங்க மாணவனிடம் ரூ.100 லஞ்சம் கேட்கும் அரசு பள்ளி தலைமையாசிரியர்: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ appeared first on Dinakaran.

Related Stories: