தமிழ்நாடு முழுவதும் சாலைப்பணியாளர் காலி பணியிடம் நிரப்புமாறு அரசுக்கு வலியுறுத்தல்

 

ஈரோடு, பிப்.5: தமிழகம் முழுவதும் உள்ள 7500க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று சாலைப்பணியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட செயலாளர் ரங்கநாதன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

போராட்டத்தின் போது 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். இறந்த சாலைப்பணியாளர் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும். தர ஊதியத்தை ரூ.1900 ஆக உயர்த்தி அன்ஸ்கில்டு பணியாளராக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 7500க்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு முன்வர வேண்டும். இளைஞர்களுக்கு முன்னுரிமை அளித்து பணிகள் வழங்க வேண்டும். இவ்வறு கூறப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு முழுவதும் சாலைப்பணியாளர் காலி பணியிடம் நிரப்புமாறு அரசுக்கு வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: