தமிழர் நலவாரிய உறுப்பினர் எண்ணிக்கை 13லிருந்து 15 ஆக உயர்த்த முடிவு: சட்டசபையில் மசோதா தாக்கல்

சென்னை: சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்த மசோதாவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டை வாழ்விடமாகக் கொள்ளாத தமிழர்களின் நலனை உறுதி செய்ய, தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நலச் சட்டம் உருவாக்கப்பட்டது. தற்போது சங்கமாக இருந்ததை வாரியமாக மாற்றியுள்ளதால் அதிலுள்ள பதவிகளையும் அதற்கேற்ற வகையில், தலைவர், உறுப்பினர் என்று மாற்றப்படுகிறது. வாரியத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை 13ல் இருந்து 15 ஆக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வசிக்காத தமிழர்கள் மறுவாழ்வு மற்றும் நலன் ஆணையரை அந்த வாரியத்தின் உறுப்பினர் செயலாளராக பதவி வகிக்கவும் அரசு முன்மொழிந்துள்ளது. அதன்படி இந்த மாற்றங்களை மேற்கொள்வதற்கு வசதியாக இந்த சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post தமிழர் நலவாரிய உறுப்பினர் எண்ணிக்கை 13லிருந்து 15 ஆக உயர்த்த முடிவு: சட்டசபையில் மசோதா தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: