தமிழகம் முழுவதும் கோயில் இடங்களில் குடியிருக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க முடியாது : அமைச்சர் சேகர் பாபு உறுதி!!

சென்னை : தமிழகம் முழுவதும் ரூபாய் 500 கோடி மதிப்புள்ள 79 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அன்னதானத் திட்டப் பணிகளையும் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “சென்னை வடபழனியில் உள்ள ஆதிமூல பெருமாள் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 79 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. திமுக பதவியேற்ற 55 நாட்களில் இதுவரை ரூ.500 கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட நிலம் மீட்கப்பட்டுள்ளது.கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் குழுவாக 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை வாடகை தாரர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோயில் இடங்களில் குடியிருக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க முடியாது. கோயில் இடங்களில் உள்ள கடைகள் உள்ளிட்ட வைத்து மறுபரிசீலனை செய்து புதிய வாடகை நிர்ணயிக்கப்படும்.கடந்த ஆட்சியில் கோவில் இடங்கள் குறைந்த விலைக்கு வாடகை விடப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் 5 ஆண்டுகளுக்கும் மேல் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றுவோர் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.” என்றார்….

The post தமிழகம் முழுவதும் கோயில் இடங்களில் குடியிருக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க முடியாது : அமைச்சர் சேகர் பாபு உறுதி!! appeared first on Dinakaran.

Related Stories: