தமிழகத்தில் இருந்து நீட் விரட்டியது; உக்ரைனில் இருந்து போர் விரட்டியது: மயிலாடுதுறை மாணவி வேதனை

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பஞ்சநதிக்குளத்தை சேர்ந்த நமச்சிவாயம் மகன் அகத்தியன். இவர் உக்ரைன் கார்க்யூ மருத்துவ பல்கலைக்கழகத்தில் முதாலாமாண்டு எம்பிபிஎஸ் பட்டப்படிப்பு படித்து வருகிறார். உக்ரைனில் நடந்து வரும் போரால் அகத்தியன் நாடு திரும்ப முடியாமல் தவித்து வந்தார். இந்நிலையில் ஒன்றிய, மாநில அரசுகளின் நடவடிக்கையால் உக்ரைனில் இருந்து சொந்த ஊருக்கு நேற்று வந்த அகத்தியனை அவரது பெற்றோர் உற்சாகமாக வரவேற்றனர். இதைதொடர்ந்து அகத்தியன் கூறியதாவது: உக்ரைனிலிருந்து ஊர் திரும்புவதற்காக 5 நாட்கள் பதுங்கு குழியில் பதுங்கியிருந்ேதாம். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ரயிலில் ஏறி கழிவறையில் 26 மணி நேரம் நின்று கொண்டே 2 நாட்கள் பயணித்து செக்கோஸ்லோவியா வந்தடைந்தேன். பின்னர் அங்கிருந்து இந்திய தூதரகம் மூலம் விமானத்தில் சொந்த ஊர் வந்தேன். நான் மருத்துவ படிப்பில் சேர்ந்து ஒரு நாள் மட்டுமே கல்லூரிக்கு சென்றேன். எனது கல்வி சான்றிதழ் அனைத்தும் உக்ரைன் பல்கலைக்கழகத்தில் உள்ளது. இதனால் எனது படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே ஒன்றிய, மாநில அரசு விரைவில் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றார்.அகத்தியனின் அண்ணன் பாலாஜி, சீனாவில் மருத்துவம் படித்தார். 2 ஆண்டுகள் படித்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக தாயகம் திரும்பினார். பின்னர்  மீண்டும் படிப்பை தொடர சீனாவுக்கு செல்ல அங்குள்ள அரசு விசா கொடுக்க மறுப்பதால் அவரது படிப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. ஒரே வீட்டில் வெளிநாட்டில் 2 மகன்களை மருத்துவ படிப்புக்காக அனுப்பிய நிலையில் இருவரும் படிப்பை தொடர முடியாமல் சொந்த ஊர் திரும்பியிருப்பது அவரது பெற்றோர், உறவினர்களிடையே மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.மயிலாடுதுறைமயிலாடுதுறை மாவட்டம் கோவஞ்சேரியை சேர்ந்த விவசாயி ஆனந்த் மகள் ஆர்த்திகா(23). உக்ரைன் கார்க்யூ மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஐந்தாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். நேற்று இவரும் சொந்த ஊருக்கு வந்தார். அவரை அவரது பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்றனர். இதைதொடர்ந்து மாணவியை நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நிவேதா முருகன், குத்தாலம் ஒன்றிய செயலாளர் மங்கைசங்கர், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன் சந்தித்து ஆறுதல் கூறினர்.ஆர்த்திகா கூறுகையில், கார்க்யூ பகுதியில் மரண பயத்தில் இருந்தோம். திடீரென ரஷ்யா போர் நிறுத்தம் செய்ததை பயன்படுத்தி போலந்து எல்லைக்கு வந்ேதாம். உக்ரைன் அரசு எந்த உதவியும் செய்யவில்லை. பின்னர் போலந்திலிருந்து டெல்லிக்கு ஒன்றிய அரசு அழைத்து வந்தது. டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு அழைத்து செல்லப்பட்டோம். அங்கிருந்து சொந்த ஊருக்கு வந்தோம். எங்களை தமிழகத்திலிருந்து நீட் விரட்டியது. உக்ரைனில் போர் எங்களை விரட்டியது என்றார்….

The post தமிழகத்தில் இருந்து நீட் விரட்டியது; உக்ரைனில் இருந்து போர் விரட்டியது: மயிலாடுதுறை மாணவி வேதனை appeared first on Dinakaran.

Related Stories: