தஞ்சை, தூத்துக்குடியில் சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்தது மாவட்ட நிர்வாகம்

தஞ்சை: தஞ்சை, தூத்துக்குடியில் சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான சொத்துக்களை மாவட்ட நிர்வாகம் பறிமுதல் செய்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டை தொடர்ந்து தஞ்சையிலும் 2 பேரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 2017ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய இடங்களில் இருந்த சொத்துக்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், தஞ்சையில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசு முடிவு செய்தது. இதைதொடர்ந்து இன்று மாவட்ட கலெக்டர் மூலம் அந்த சொத்துக்கள் முடக்கப்பட்டன. அதில், தஞ்சை வஉசி நகரில் உள்ள 2 கட்டிடங்கள் மற்றம் காலி மனை பறிமுதல் செய்யப்பபட்டது. இதேபோல் வருமானத்துக்கு அதிகமாக வாங்கிய சொத்துக்களையும், நீதிமன்ற உத்தரவுபடி அதிகாரிகள் கையகப்படுத்தினர். அந்த கட்டிடம், காலி நிலம் ஆகியவை அரசுக்கே சொந்தம் என நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதேபோல் மன்னார்குடி, பட்டுக்கோட்டை – சிதம்பரம் சாலையில் உள்ள சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாளியுள்ளன. இதன் மூலம் வரும் வருவாய் வாடகை அனைத்தும் அரசுக்கே சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post தஞ்சை, தூத்துக்குடியில் சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்தது மாவட்ட நிர்வாகம் appeared first on Dinakaran.

Related Stories: