டிவி,செல்போன்கள் திருடிய சென்னை போலீஸ் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை எஸ்பி அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை காவலர் பயிற்சி மையத்தில் தமிழ்நாடு காவலர் பல்பொருள் அங்காடி (போலீஸ் கேன்டீன்) செயல்படுகிறது. இந்த கேன்டீனில் கடந்த நவம்பர் 10ம் தேதி விற்பனைக்கு வைத்திருந்த 3 எல்இடி டிவிக்கள் மற்றும் 2 செல்போன்கள் திருட்டு போனது. இதுகுறித்து ஏடிஎஸ்பி ஸ்டீபன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், டிவிக்கள் மற்றும் செல்போன்களை திருடியது சென்னை சிட்டி போலீசில் காவலராக உள்ள, திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா அல்லியாளமங்கலத்தைச் சேர்ந்த சரத்குமார் (29) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை தனிப்படை போலீசார் சென்னைக்கு விரைந்து சென்று சரத்குமாரை கைது செய்தனர். …

The post டிவி,செல்போன்கள் திருடிய சென்னை போலீஸ் கைது appeared first on Dinakaran.

Related Stories: