இன்று சுவீடனுடன் மோத உள்ள நிலையில் அரையிறுதிக்குள் நுழைய அற்புதமான வாய்ப்பு பயன்படுத்துமா இங்கிலாந்து?

சமாரா: உலக கோப்பை தொடரின் கால் இறுதியில் இன்று சுவீடன் - இங்கிலாந்து அணிகள்  மோதுகிறது. 1966ல் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி இந்த முறை  ஜி பிரிவில் இடம்பெற்றிருந்தது.  இங்கிலாந்து அணி துனீஷியாவை 2-1, பனாமாவை 6-1 என்று வென்றது.  கடைசி ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் 1-0 என தோல்வியடைந்தது. நாக் அவுட் சுற்றில் 4-3 என பெனால்டி ஷூட்அவுட்டில் கொலம்பியாவை வென்றது. இதுவரை உலகக் கோப்பையில் 8 முறை காலிறுதியில் விளையாடிய அணி இன்று சுவீடனை சந்திக்கிறது.

1958ம் ஆண்டு  நடந்த கால்பந்து போட்டியில் சுவீடன் அணி பைனலில் விளையாடியது. இந்த முறை எப் பிரிவில் இடம்பெற்றிருந்த சுவீடன் இந்த உலக கோப்பையில் இதுவரை ஆடிய ஆட்டங்களில் தென்கொரியாவை 1-0, மெக்சிகோவை 3-0 என வென்றது. நடப்பு சாம்பியன் ஜெர்மனியிடம் 2-1 என தோல்வியடைந்தது. நாக் அவுட் சுற்றில் சுவிட்சர்லாந்தை 1-0 என வென்றது. இதுவரை 5 முறை காலிறுதியில் விளையாடி அதில் 4 முறை வென்றுள்ளது. இந்த நிலையில் இன்று களம்  காண்கிறது.

மண்ணைக் கவ்விய மாவீரர்கள்

நடப்பு சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுடன் மூட்டை கட்டியது. அர்ஜென்டினா, ஸ்பெயின் ஆகியவை நாக் அவுட் சுற்றில் வெளியேறின. நேற்று நடந்த முதல் காலிறுதி ஆட்டத்தில் உருகுவே வெளியேறியது. அதைத் தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து மற்றொரு முன்னாள் சாம்பியனான பிரேசிலும் வெளியேறியுள்ள நிலையில் மெஸ்ஸி, ரொனால்டோவைத் தொடர்ந்து நெய்மரும் அவுட் ஆனதால் கால்பந்து ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: