சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லாமல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்-மழை பெய்தால் பாதிக்கும் அபாயம்

கீழ்வேளூர் : நாகை மாவட்டத்தில் இந்தாண்டு சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடை நடந்து வருகிறது. அறுவடை செய்த நெல்லை தனியார் குறைந்த விலைக்கு வாங்குவதால் விவசாயிகள் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஒரு நாளைக்கு 1,000 சிப்பம் மட்டுமே கொள்முதல் செய்ய கூறப்பட்டாலும் 800 மூட்டைகள் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் நெல்லை கொள்முதல் செய்ய போதிய சாக்குகள் வழங்குவதில்லை. மேலும் கொள்முதல் செய்யப்பட்டும் நெல் மூட்டைகள் நாகை, திருப்பூண்டி, சாட்டியக்குடி, பனங்குடி வெள்ளப்பள்ளம், அருந்தவப்புலம் போன்ற இடங்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்படும். ஆனால் தற்போது கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குக்கு அனுப்பாமல் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் மழை பெய்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் வகையில் அடுக்கி வைக்கப்படுகிறது.இந்நிலையில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை உடனுக்குடன் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்காமல் கொள்முதல் நிலையத்திலேயே அடுக்கப்படுவதால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லை உடனுக்குடன் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்காமல் இதே நிலை நீடித்தால் கொள்முதலை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும். சேமிப்பு கிடங்குகளில் உள்ள குறுவை நெல் மூட்டைகள் நெல் அரவைக்கு அனுப்பாமல் உள்ளது.கொள்முதல் செய்த நெல்லை அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். குறுவை நெல்கள் அதிகமாக இருந்தால் சேமிப்பு கிடங்குகளை மேலும் விஸ்தரிப்பு செய்தோ, புதிதாக சேமிப்பு கிடங்கை அமைத்தோ நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை அனுப்பி வைக்க வேண்டும். தொடர்ந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லாமல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்-மழை பெய்தால் பாதிக்கும் அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: