செயின் பறிக்க முயற்சி சிறுவன் உள்பட 2 பேர் கைது

அம்பத்தூர்: பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற சிறுவன் உள்பட 2 பேரை கைது செய்தனர். அயனாவரம் அம்பேத்கர் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் குணசுந்தரி(44). அப்பகுதியில் டிபன் கடை நடத்திவருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஐசிஎப் கொன்னூர் நெடுஞ்சாலை அம்மா உணவகம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த 2 பேர் குணசுந்தரியின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றனர். சுதாரித்த குணசுந்தரி செயினை இறுக்கமாக பிடித்துக்கொண்டார். இதனால் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் மடக்கி பிடித்து ஐசிஎப் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் இருவரையும் காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில், வேப்பேரியை சேர்ந்த பிரகாஷ்(25), ஆட்டோ டிரைவர். புளியந்தோப்பை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுவனை கீழ்ப்பாக்கம் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினர்….

The post செயின் பறிக்க முயற்சி சிறுவன் உள்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: