செங்கல்பட்டில் 21ம் தேதி சிறப்பு முகாம் அதிக உடல் பருமனை குறைக்க இலவச ஆலோசனை

புதுச்சேரி, மார்ச் 20: உடல் பருமனால் அவதிப் படுபவர்களுக்கு ஒரு இனிய செய்தி. 21ம் நூற்றாண்டில் உடல் பருமன் நோய் என்பது உலகம் முழுவதும் பெரும்பான்மையாக உள்ளது. மேலும் உடல் பருமன் நோய் வாழ்க்கை முறை நோய்களான சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, மூட்டுவலி இதய நோய்கள், குறட்டை, குழந்தையின்மை, சிலவகை புற்று நோய்களுக்கும் வழிகாட்டியாக விளங்குகிறது தற்பொழுது குணப்படுத்த முடியாத உடல்பருமன் மற்றும் சர்க்கரை நோய்க்கு உடல்பருமன் அறுவை சிகிச்சை ஒரு சிறந்த சிகிச்சை முறையாக இருக்கிறது. இப்பொழுது இந்த அறுவை சிகிச்சையானது தமிழக அரசின் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் உயிர் காக்கும் அறுவை சிகிச்சையாக அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. நம் மக்களுக்காக உலகத்தரம் சிகிச்சை வழங்க புகழ் பெற்ற கோவை ஜெம் மருத்துவமனை இப்போது நம் தலைநகர் சென்னையிலும் தொடங்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு கோவை மற்றும் சென்னை ஜெம் மருத்துவமனை சார்பில் நமது செங்கல்பட்டில் நாளை 21ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் 1 மணி வரை கிருஷ்ணா மஹால், ஜிஎஸ்டி ரோடு, ஜிஆர்டி நகைகடை எதிரில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் ஜெம் மருத்துவமனையின் சிறப்பு உடல்பருமன் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரவீன் ராஜ் மற்றும் டாக்டர் ஜெயந்த் லியோ ஆகியோரின் ஆலோசனைகளை பெற்றிடுங்கள். இந்த ஆலோசனை நிகழ்வில் கலந்து கொண்டு அதிக உடல் எடையால் குறட்டை குழந்தையின்மை, கட்டுப்பாடற்ற சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற ஆபத்தான நோய்களில் இருந்து விடுபட்டு, நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பொன்மொழிக்கு ஏற்ப ஆரோக்கியமான வாழ்க்கையை பெற்றிடுவீர்.  முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் உடல்பருமன் அறுவை சிகிச்சையை ஒரு ரூபாய் செலவின்றி செய்து பயன் பெற்றிடுவீர். …

The post செங்கல்பட்டில் 21ம் தேதி சிறப்பு முகாம் அதிக உடல் பருமனை குறைக்க இலவச ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: