சீரமைப்பு பணிகள் காரணமாக பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் சேவை மாற்றம்!: தெற்கு ரயில்வே அறிவிப்பு

குமரி: சீரமைப்பு பணிகள் காரணமாக பாம்பன் ரயில் பாலத்தில் முக்கிய ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது. பாம்பன் ரயில் பாலத்தில் கடந்த ஜூன் 28ம் தேதி சென்சாரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இந்த பாலத்தில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.  தற்போது, ரயில்கள் அனைத்தும் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. சென்சாரை சரி செய்யும் பணியில் சென்னை ஐஐடி குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் சேவையில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தின் விவரம் பின்வருமாறு…* பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் மண்டபம் – ராமேஸ்வரம் இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது.* சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் இன்று மண்டபம் – ராமேஸ்வரம் இடையே இடையே பகுதி சேவை ரத்து செய்யப்படுகிறது. * மறுமார்க்கத்தில் ராமேஸ்வரம் சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் நாளை ராமேஸ்வரம் – மண்டபம் இடையே மட்டும் ரத்து. * சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் நாளை மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படும்.* ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் நாளை மண்டபத்தில் இருந்து மாலை 5:40க்கு புறப்படும்.* திருச்சி – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் நாளை மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படும்.* மறுமார்க்கத்தில் ராமேஸ்வரம் – திருச்சி சிறப்பு ரயில் நாளை மண்டபத்தில் இருந்து பிற்பகல் 3:05க்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. …

The post சீரமைப்பு பணிகள் காரணமாக பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் சேவை மாற்றம்!: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: