சிவாலயங்களில் மார்கழி மாத தேய்பிறை பிரதோஷ விழா.திருவண்ணாமலையில் நந்தியம்பெருமாளுக்கு சிறப்பு பூஜை..!!

தமிழகம்: மார்கழி மாத தேய்பிறை பிரதோஷத்தை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மார்கழி தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம்பெருமாளுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள நந்திக்கு அரிசி, மாவு, மஞ்சள்தூள், ஆயிரம் லிட்டர் பால், சந்தனம், விபூதி ஆகியவற்றால் அபிஷேகம் நடத்தப்பட்டது. திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரில் உள்ள அறம் வளர்த்த நாயகி அம்மன் உடனுறை, பூமிநாத சுவாமி திருக்கோவில் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பஞ்செட்டில் அமைந்துள்ள 1500 வருடங்கள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவிலிலும் மார்கழி மாத தேய்பிறை பிரதோஷம் விமர்சையாக நடைபெற்றது. இதனிடையே கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் 53வது ஆண்டு திருவிழாவை ஒட்டி யானை மீது ஐயப்பன் திருவீதியுலா நடைபெற்றது. சுவாமி வீதியுலாவில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் கேரள பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. மார்கழி திங்கள் அம்மாவாசை தினமான நாளை அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே  18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர்க்கு 50,000 வட மாலை தயாரிக்கும் பணி இரவு, பகலாக நடைபெற்று வருகிறது. தூத்துக்குடியில் உள்ள வைகுண்டபதி பெருமாள் ஆலயத்தில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அனுமனை ஏராளமானோர் தரிசித்தனர். இதே போல் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் நெரிசலின்றி தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.   …

The post சிவாலயங்களில் மார்கழி மாத தேய்பிறை பிரதோஷ விழா.திருவண்ணாமலையில் நந்தியம்பெருமாளுக்கு சிறப்பு பூஜை..!! appeared first on Dinakaran.

Related Stories: