சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அனில் பிரப்-க்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

மும்பை : பணமோசடி விசாரணை தொடர்பாக மராட்டிய அமைச்சரும் சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அனில் பிரப்-க்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது. நிலம் பேரம் ஒன்றில் நடந்த முறைகேடுகள் தொடர்பான பணமோசடி விசாரணையின் ஒருபகுதியாக இந்த சோதனை நடைபெற்றது.அனில் பிரப் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து மராட்டியத்தில் புனே, மும்பை மற்றும் தபோலி ஆகிய நகரங்களில் உள்ள 7 வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையால் சோதனை நடத்தப்படுகிறது.ரத்தினகிரி மாவட்டத்தில் உள்ள தபோலியில் 2017-ம் ஆண்டு ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை வாங்கிய அனில், அதனை 2019-ம் ஆண்டு தான் பதிவு செய்துள்ளார் எனவும் 2020-ம் ஆணு வேறு ஒருவருக்கு விற்றிருப்பதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் 2017-ம் ஆண்டே இந்த நிலத்தில் ரூ.6 கோடி மதிப்பில் கேளிக்கை விடுதி கட்டப்பட்டது வருமானவரித்துறை விசாரணையில் தெரியவந்தது.இது தொடர்பாக மராட்டிய அமைச்சர் அனில் பிரப்-க்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.          …

The post சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அனில் பிரப்-க்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை appeared first on Dinakaran.

Related Stories: