சிறுவாச்சூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

பெரம்பலூர், ஜூலை 12: பெரம்பலூர் மாவட்ட ஊரக பகுதிகளில் \”மக்களுடன் முதல்வர்\” திட்டமுகாமை சிறுவாச்சூரில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கிவைத்து பார்வை யிட்டார். ஊரகப்பகுதிகளில் \”மக்க ளுடன்முதல்வர்\” திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (11 ம்தேதி) தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, பெரம்பலூர் ஒன்றியம் சிறுவாச்சூர் ஊராட்சியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்களோடு அமர்ந்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேரலையில் நிகழ்ச்சியை பார்த்து பின்னர், மக்களுடன் முதல்வர் முகாமைத் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். மேலும் முகாமில் பொது மக்களின் கோரிக்கை மனுக்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்படும்முறை, வழங்கப்படும் சேவைகள் குறித்தும் பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) வைத்தியநாதன், (வளர்ச்சி) ஜெய்சங்கர், ஊராட்சிகள் உதவி இயக்குநர் வீரமலை, ஒன்றியக் குழுத் தலைவர்கள் பெரம்பலூர் மீனா அண்ணாதுரை, வேப்பந்தட்டை ராமலிங்கம், வேப்பூர் பிரபா செல்லப்பிள்ளை, பேரூராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி கவுன்சி லர்கள் பாஸ்கர், டாக்டர் கருணாநிதி உள்ளிட்ட உள் ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அனைத்துத் துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

The post சிறுவாச்சூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் appeared first on Dinakaran.

Related Stories: