சிறுதானியங்களுக்கான வணிக மேம்பாட்டு மையம் தஞ்சாவூருக்கு பயணம்: மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒரு நாள் சுற்றுலா

பெரம்பலூர்,பிப்.29: பெரம்பலூர் மாவட்ட ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒரு நாள் சுற்றுலா பயணத்தை கலெக்டர் கற்பகம் துவக்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சித் துறை சார்பில் ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒரு நாள் சுற்றுலா பயண வாகனத்தை பெரம் பலூர் மாவட்டக் கலெக்டர் கற்பகம் நேற்று (28ம்தேதி) பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகளின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவி களை வழங்கி வருகிறது. அதனடிப் படையில் மாற் றுத்திறனாளி குழந்தைக ளும் மற்ற குழந்தைக ளுக்கு இணையாக இருக் கும் வகையில் அவர்களை வருடம் தோறும் சுற்றுலா அழைத்துச் செல்ல வழி வகைசெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக பெரம்ப லூர் மாவட்டத்தில் செயல் படும் ஆரம்ப பயிற்சி மையங்கள் மற்றும் சிறப்பு பள்ளிகளில் பயிலும் மன வளர்ச்சி குன்றிய மற்றும் செவித்திறன் பாதிக்கப் பட்ட 40மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள், 40 சிறப்புஆசிரியர்கள் ஒரு நாள் சுற்றுப்பயணமாக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அழைத்துச் செல்லும் வகையில் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த சுற்றுலாவில் தஞ்சை பெரிய கோவில் மியூசியம் மற்றும் மாளிகைகளை குழந்தைகள் சுற்றி பார்க்க உள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நல அலுவலர் பொம்மி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post சிறுதானியங்களுக்கான வணிக மேம்பாட்டு மையம் தஞ்சாவூருக்கு பயணம்: மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒரு நாள் சுற்றுலா appeared first on Dinakaran.

Related Stories: