ஹரியானாவில் ஜீவனாம்சம் வழக்கில் ரூ.25 ஆயிரத்தை சில்லரையாக கோர்ட்டில் கட்டிய கணவர்

சண்டிகர்: ஹரியானாவில் ஜீவனாம்சம் வழக்கில் மனைவிக்கு 25 ஆயிரம் ரூபாயை கணவர் சில்லறையாக அளித்துள்ளார்.  ஹரியானா மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிபவருக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் வழக்கறிஞரின் மனைவி ஜீவனாம்சம் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இதையடுத்து மனைவிக்கு மாதம் ரூ.25 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கீழமைநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், மாதம் ரூ.25 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்ற கீழமைநீதிமன்ற உத்தரவை உறுதி செய்தார். மேலும் ஏற்கனவே வழங்காமல் இருந்த 2 மாதத்துக்கான ஜீவனாம்சத்தையும் சேர்த்து மொத்தம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதையடுத்து வழக்கறிஞர் ரூ.25 ஆயிரத்தை சில்லரையாக மூட்டையில் கட்டி நீதிமன்றத்துக்கு வந்து மனைவியிடம் வழங்கினார். அதை ஏற்க அவரது மனைவி மறுத்து விட்டார். தனக்கு அவசரமாக பணம் தேவைப்படும் நிலையில் இப்படி சில்லரையாக தருவதும் ஒரு வகையில் கொடுமைதான், சில்லரையை வங்கியில் வாங்க மறுக்கிறார்கள் என்றார். பின்னர் அந்த வழக்கறிஞர் சில்லரைகளை எனது ஜூனியர்களை விட்டு எண்ணித் தரச்சொல்கிறேன் என்றும் அதை ரூபாய் நோட்டுகளாக மாற்றித் தருவதாகவும் உறுதியளித்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: