கோவையில் இரிடியம் மோசடி கும்பல் சிக்கியது: 9 பெட்டிகளில் கள்ளநோட்டுகள் பறிமுதல்

கோவை: நாமக்கல், திருச்செங்கோடு உட்பட பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டிய இரிடியம் மோசடி கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்கள், 9 பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்த கள்ள ரூபாய் நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் போலி ரூபாய் நோட்டுக்களை காட்டி பணம் மோசடி செய்வதாக புகார் வந்தது. இதன்பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் பிரஸ் காலனியில் உள்ள பாலாஜி கார்டன் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் 9 அட்டை பெட்டியில்  2 ஆயிரம் ரூபாய்  போலி  நோட்டுக்களை மறைத்து வைத்திருந்தனர். இதுதவிர 2 இரிடியம் கலசம் இருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளநோட்டு, இரிடியம் கலசத்தை பதுக்கி வைத்திருந்த காளிமுத்து (28), மோகன்ராஜ் (38), விஜயகுமார் (35) ஆகியோரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த சடகோபால் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்கள் வைத்திருந்த லேப்டாப், 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பல லட்ச ரூபாய் போலி ரூபாய் நோட்டுக்கள் சிக்கியிருப்பதாக தெரிகிறது. இந்த ரூபாய் நோட்டுக்களை இவர்கள் கலர் பிரிண்டர் வைத்து தயார் செய்துள்ளனர். இவர்கள் டாஸ்மாக் கடை உள்பட பல்வேறு கூட்டம் மிகுந்த இடங்களில் இந்த ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட்டிருப்பதாகவும், பலரிடம் ஒரிஜினல் ரூபாய் நோட்டுக்களை வாங்கி, போலி ரூபாய் நோட்டுக்களை கொடுத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.கைதான கும்பல் நாமக்கல், திருச்செங்கோடு உட்பட பல்வேறு பகுதியில் கைவரிசை காட்டி உள்ளனர். போலி ரூபாய் மற்றும் இரிடியம் கலசம் வாங்க வந்த நபர்களை ஏமாற்றி இவர்கள் பணம் அபகரிக்க முயன்றுள்ளனர். இதன் பின்னணி தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்….

The post கோவையில் இரிடியம் மோசடி கும்பல் சிக்கியது: 9 பெட்டிகளில் கள்ளநோட்டுகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: