கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொழில் முனைவோர் பயிற்சி தொடங்கியது

கோத்தகிரி,ஆக.17: கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் தொழில் முனைவோர் பயிற்சி துவக்கி வைக்கப்பட்டு கடன் உதவி வழங்கப்பட்டது. கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் தொழில்முனைவோர் பயிற்சி கோத்தகிரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் உற்பத்தி சம்மந்தப்பட்ட தொழில்களுக்கு 30 சதவீத மானிய இணை நிதி கடன் திட்டம் மூலம் 6 பேருக்கு ரூ. 38 லட்சம் வங்கி கடன் உதவி வழங்கப்பட்டது.

மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு சுமார் 30 முதல் 70 ஆயிரம் வரை நுண் தொழில் நிறுவன நிதி கடன் திட்டம் மூலம் நீலகிரி மாவட்டத்தில் முதன் முதலாக கோத்தகிரியில் 10 நபர்களுக்கு ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் காசோலை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராம்குமார், மாவட்ட திட்ட செயல் அலுவலர் ரமேஷ் கிருஷ்ணன், செயல் அலுவலர்கள் தினேஷ் குமார், ப்ரீத்தா, தொழில்நிதி வல்லுநர் சந்திரசேகரன், வட்டார அணி தலைவர் முருகேசன், திட்ட செயலளர் பட்சி ராஜன் மற்றும் தொழிற்சார் வல்லுநர்கள், கோத்தகிரி வட்டாரம் மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த தொழில்முனைவோர் பயிற்சி 3 நாட்கள் நடைபெறுகிறது.

The post கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொழில் முனைவோர் பயிற்சி தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: