கொலிஜியத்தில் மேலும் ஒரு நீதிபதி சேர்ப்பு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் செயல்படும் கொலிஜியத்தில் மேலும் ஒரு நீதிபதி சேர்த்ததால் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி சந்திரசூட் பதவி ஏற்ற பிறகு நேற்று முதன்முறையாக கொலிஜீயம் கூடியது. இதில் நீதிபதிகள் எஸ்கே கவுல், அப்துல்நசீர், கே.எம். ஜோசப், எம்ஆர் ஷா ஆகியோருடன் 2024 நவம்பர் 11ம் தேதி சந்திரசூட்டிற்கு பிறகு புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்கும் நீதிபதி சஞ்சீவ் கன்னாவும் பங்கேற்றார். இதனால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் சேர்ந்து 6 பேர் கொண்ட கொலிஜியம் அமைப்பாக மாறியது. இவர்கள் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்கள்.  அப்போது ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சய் மிஸ்ரா, ஜம்மு காஷ்மீர் தலைமை நீதிபதியாக கோடீஸ்வர்சிங் ஆகியோரை பரிந்துரை செய்ததாகவும், வருகிற ஜனவரி மாதம் ஓய்வு பெற இருக்கும் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி அப்துல் நசீருக்கு பதில் புதிய கொலிஜீய உறுப்பினராக நீதிபதி அஜய் ரஸ்தோகியை 6 பேர் கொண்ட கொலிஜியத்தில் சேர்ப்பது என்றும் பரிந்துரை செய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் உச்ச நீதிமன்ற புதிய நீதிபதிகளாக ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மிட்டல், பாட்னா தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் தலைமை நீதிபதி சஞ்சய் குமார், பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி அசாதுதீன் அமனதுல்லா, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோரை நியமிக்க பரிந்துரை செய்துள்ளது….

The post கொலிஜியத்தில் மேலும் ஒரு நீதிபதி சேர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: