பந்தலூர், செப்.18 : பந்தலூர் அருகே கேரளா வயநாடு பகுதியில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நிவாரணம் பொருட்கள் வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே சூரல்மலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராமானவர்கள் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். மேலும் பலர் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தக்கை எம்எல்ஏ அத்தியாவசிய உணவு பொருட்களான அரிசி, பருப்பு,துணிகள் மற்றும் ஓணம் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வழங்கினார்.
இதனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலார் தளபதி பாஸ்கர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நீலகிரி மாவட்ட தலைவர் கணேஷ் எம்எல்ஏ மற்றும் மாநில பொதுச்செயலாளர், கோஷி பேபி ஆகியோர் அறிவுறுத்தலின் படி மாநில பொதுக்குழு உறுப்பினர் அஷ்ரப், வட்டார தலைவர் ரவி ஆகியோர் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினர். அப்போது, வட்டார செயலாளர் அனீஸ் ஜோசப், ஊராட்சி பொதுச்செயலார் ஆசீஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
The post கேரளா வயநாட்டில் நிலச்சரிவில் பாதித்த மக்களுக்கு காங்கிரஸ் சார்பில் நிவாரணம் appeared first on Dinakaran.