கேஜிஎஃப் நடிகருக்கு தொண்டை புற்றுநோய்

பெங்களூர்: கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்த கன்னட நடிகர் ஹரிஷ் ராய், கடுமையான தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ‘கேஜிஎஃப்’,  ‘கேஜிஎஃப் 2’ ஆகிய படங்களில் காசிம் சாச்சா என்ற முஸ்லிம் வேடத்தில் நடித்து இருந்தவர், ஹரிஷ் ராய். படத்தின் ஹீரோவாக நடித்த யஷ்ஷுக்கு வலதுகரமாக இவர் இருப்பார். கன்னடத்தில் பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக தொண்டை புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். தற்போது புற்றுநோயின் 4வது ஸ்டேஜில் இருப்பதாக இவர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ஹரிஷ் ராய் கூறுகையில், ‘சூழ்நிலைகள் உங்களுக்கு மகத்துவத்தை அளிக்கலாம் அல்லது உங்களிடம் இருந்து பொருட்களை எடுத்துச் செல்லலாம். விதியில் இருந்து தப்பிக்க முடியாது. நான் மூன்று வருடங்களாக கடுமையான புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறேன். ‘கேஜிஎஃப்’ படத்தில் நான் நடிக்கும்போது நீண்ட தாடி வைத்திருந்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. வீக்கத்தை மறைக்கவே தாடி நீளமாக வைத்து நடித்தேன். என் கழுத்தில் இந்த நோயின் அடையாளம் தெரிகிறது. முதலில் என்னிடம் பணம் இல்லாததால் அறுவை சிகிச்சையை ஒத்திவைத்தேன். திரைப்படங்கள் வெளியாகும் வரை காத்திருந்தேன். இப்போது புற்றுநோயின் நான்காவது கட்டத்தில் இருப்பதால் நிலைமை மோசமாகி வருகிறது’ என்றார்….

The post கேஜிஎஃப் நடிகருக்கு தொண்டை புற்றுநோய் appeared first on Dinakaran.

Related Stories: