கூரியர் நிறுவன ஊழியரை தாக்கிய 8 பேர் கைது

தூத்துக்குடி, ஏப். 4: தூத்துக்குடி டூவிபுரத்தை சேர்ந்தவர் ஏசய்யா மகன் மாதவன்(23). கூரியர் நிறுவன ஊழியரான இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த சித்திரைவேல் மகன் கார்த்திக்(23) என்பவருக்கும் வீட்டின் முன்பு பைக்கை நிறுத்துவது தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக் மற்றும் அவரது நண்பர்களான தூத்துக்குடி தச்சர் தெருவை சேர்ந்த பிரபாகர் மகன் காட்வின் (23), தூத்துக்குடி முத்து தெருவை சேர்ந்த தனபால் மகன் ஆறுமுக கணேஷ் (23), மட்டக்கடையை சேர்ந்த அந்தோனி பிச்சை மகன் மரிய அந்தோனி ஆக்னல் (23), டூவிபுரத்தை சேர்ந்த காசிராஜன் மகன் ராஜேஷ்குமார் (23), கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த பட்டு மகன் சரவணன் (26), நடராஜபுரம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் முருகன் என்ற டியோ முருகன் (24), பிரபு என்ற வினோத் குமார் (26) ஆகியோர் சேர்ந்து மாதவன் வீட்டுக்குள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தி அவரை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து மாதவன், மத்திய பாகம் போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்கு பதிந்து கார்த்திக் உள்ளிட்ட 8 பேரையும் கைது செய்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மீது ஏற்கனவே 2 வழக்குகளும், காட்வின் மீது 2 வழக்குகளும், ஆறுமுக கணேஷ் மீது ஒரு வழக்கும், மரிய அந்தோனி ஆக்னல் மீது 11 வழக்குகளும், சரவணன் மீது ஒரு வழக்கும், முருகன் என்ற டியோ முருகன் மீது 12 வழக்குகளும், பிரபு என்ற வினோத்குமார் மீது 8 வழக்குகளும் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

The post கூரியர் நிறுவன ஊழியரை தாக்கிய 8 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: