குழந்தை பிறந்த ஒரே நாளில் சோகம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் காவலர் பரிதாப மரணம்

சென்னை: குழந்தை பிறந்த ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் காவலர் உயிரிழந்த சம்பவம் ஆலந்தூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் வசந்தா (47). இவர்  மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் காவலராக பணியாற்றி வந்தார். திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்த இவர், தற்போது கருவுற்றிருந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து  அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.  அதன் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கடந்த  28ம் தேதி எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை கொரோனா வார்டில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள்  தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று அவருக்கு திடீரென  பிரசவ வலி ஏற்பட்டது. தொடர் சிகிச்சைக்கு பிறகு அவருக்கு அழகான ெபண் குழந்தை பிறந்தது. கொரோனா தொற்று காரணமாக, குழந்தை பிறந்தவுடன் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து  அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், நேற்று முன்தினம் அதிகாலை 4.15 மணியளவில் வசந்தா கொரோனா தொற்றின் காரணமாக சிகிச்சை  பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் உதவியுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. குழந்தை பிறந்த ஒரே நாளில் பெண்  காவலர் கொரோனா தொற்றினால் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

The post குழந்தை பிறந்த ஒரே நாளில் சோகம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் காவலர் பரிதாப மரணம் appeared first on Dinakaran.

Related Stories: