தமிழ்நாடு பிரிமீயர் லீக் வீரர்கள் ஏலம் : காரைக்குடி காளையில் தினேஷ் கார்த்திக்

சென்னை: தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நேற்று  நடைபெற்றது. இதில் காரைக்குடி காளை அணிக்காக தினேஷ் கார்த்திக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை போல்  தமிழ்நாடு அளவில்  நடைபெறும் டிஎன்பிஎல் டி20 தொடர் கடந்த 2 ஆண்டுகளாக நடக்கிறது. உள்ளூர் விளையாட்டு வீரர்களை சர்வதேச  போட்டிகளுக்கு தயார்படுத்தும் நோக்கத்துடன் இந்த போட்டிகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தி வருகிறது.

2016ல் நடந்த முதல் சீசனில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும், 2017ல் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும்  சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றன.

இந்த ஆண்டு  மதுரை அணியின் நிர்வாகம் கை மாறியதால்  மதுரை சூப்பர்ஜயன்ட் என்பது மதுரை பேந்தர்ஸ் ஆக மாற்றப்பட்டுள்ளது. காரைக்குடி  காளை அணியின் நிர்வாகம் கைமாறினாலும் அணியின் பெயர் மாற்றப்பட்டவில்லை. திருவள்ளூர் வீரன்ஸ் அணியின் நிர்வாகம் மாறாத நிலையில்,  அணியின் பெயர்  காஞ்சிபுரம் வீரன்ஸ் என்று மாற்றப்பட்டுள்ளது.  

3வது சீசன் ஜூலை 11ம் தேதி தொடங்க உள்ள நிலையில், வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் சென்னையில் நேற்று நடந்தது. முன்னாள்  சுழற்பந்து வீச்சாளர் எல்.சிவராமகிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.  நாடு முழுவதிலும் இருந்து பதிவு செய்திருந்த 772 வீரர்கள் நேற்று  ஏலப்பட்டியலில் இருந்தனர். ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் 19 வீரர்களை தேர்வு செய்துக் கொள்ளலாம். ஏற்கனவே தலா 3 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ள நிலையில்  எஞ்சிய வீரர்களை மட்டும் தேர்வு செய்வதற்கான ஏலம் நடைப்பெற்றது.   மொத்தம் 16 சுற்றுகளாக ஏலம் நடைபெற்றது.

முதல் சுற்றில் பெரும்பாலும் நட்சத்திர வீரர்களையே அணிகள் தேர்வு செய்தன. தூத்துக்குடி அணி வாஷிங்டன் சுந்தர்,  சேப்பாக் அணி விஜய் சங்கரை  தேர்வு செய்த நிலையில், காரைக்குடி அணி தினேஷ் கார்த்திக்கை ஏலத்தில் எடுத்தது. திண்டுக்கல் அணி ஏற்கனவே அஷ்வின் ரவிசந்திரன்,  திருச்சி  அணி இந்திரஜித், காஞ்சி அணி அபராஜித் ஆகியோரை தக்க வைத்துள்ளன. அதேநேரத்தில் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோர்  இங்கிலாந்தில்  நடைபெற உள்ள டி20, ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளதால்  டிஎன்பிஎல் போட்டிகளில் சில ஆட்டங்களில் மட்டுமே பங்கேற்பார்கள். ஏல முடிவில் டிஎன்பிஎல் அணிகளில் இடம் பெற்றுள்ள முக்கிய ஆட்டக்காரர்கள் விவரம் (முதல் 3 பெயர்கள் அணியில் தக்க வைக்கப்பட்டவர்கள்)...

காஞ்சி வீரன்ஸ்:  பாபா அபராஜித், ஆர்.சிலம்பரசன், சஞ்ஜய் யாதவ், எஸ்.லோகேஷ்வர்,விஷால் வைத்யா, அவுஷிக் ஸ்ரீனிவாஸ், சுப்ரமணிய சிவா,

முகிலேஷ், சுனில் ஷாம். திருச்சி வாரியர்ஸ்: இந்திரஜித் பாபா, கே.பரத் சங்கர், கே.விக்னேஷ், எம்.சஞ்சய், சோனு யாதவ், முரளி விஜய்,  கணபதி  சந்திரசேகர்,  சுரேஷ்குமார், மணி பாரதி, அஸ்வின் கிறிஸ்ட்.

திண்டுக்கல் டிராகன்ஸ்: அஸ்வின் ரவிசந்திரன், என் ஜெகதீசன், ஆர்.விவேக், என்.எஸ்.சதுர்வேத், ஹரி நிஷாந்த், எம்.முகமது, ரோகித் அருண்,  எம்.அபினவ், எம்.சிலம்பரசன், யாழ் அருண்மொழி.

கோவை கிங்ஸ்: ஆர்.ரோகித், பிரதோஷ் ரஞ்சன் பால், எஸ்.அஜித்ராம், ஆண்டனி தாஸ், டி.நடராஜன், அபினவ் முகுந்த், கே.விக்னேஷ், எம்.ஷாருக்கான்,  அகில் ஸ்ரீநாதன், சுமந்த் ஜெயின்.

தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்: சுப்ரமணியன் ஆனந்த், ஆகாஷ் சர்மா, எம்.கணேஷ்மூர்த்தி,  வாஷிங்டன் சுந்தர், கவுசிக் காந்தி, அதிசயராஜ் டேவிட்சன், சாய்  கிஷோர், ஜேசுராஜ், பூபாலன்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: எஸ்.கார்த்திக், ஆர்.அலெக்சாண்டர், யு.சசிதேவ், விஜய் சங்கர், கோபிநாத், எம்.அஸ்வின்,  ஹரீஷ்குமார்,  கங்கா ஸ்ரீதர் ராஜி,   சன்னிகுமார் சிங்.

காரைக்குடி காளை: எம்.ஷாஜகான், ஆர்.ராஜ்குமார், எஸ்.ேமாகன் பிரசாத், தினேஷ் கார்த்திக், எஸ்.அனிருதா, யோ மகேஷ், ஆர்.கவின், சூர்யபிரகாஷ்,  லட்சுமண், ஆதித்யா.

மதுரை பேந்தர்: கே.பி.அருண்கார்த்திக், பி.ஷிஜித் சந்திரன், ஆர்.கார்த்திகேயன், சி.வி.வருண், தலைவன் சற்குணம், அபி்ஷேக் தன்வர், ரஹில் ஷா,   கவுஷிக், ஜகநாத் ஸ்ரீனிவாஸ், ரோகித்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: