குன்னூர் எடப்பள்ளி பகுதியில் வேளாண் சந்தை தற்காலிக ஒழுங்குமுறை விற்பனைக்கூடமாக செயல்பட அனுமதி சமவெளி பகுதி மொத்த வியாபாரிகள் வாங்கி செல்ல நடவடிக்கை அதிகாரிகள் தகவல்

 

ஊட்டி, ஜூன் 23: நீலகிரி மாவட்டம் குன்னூர் எடப்பள்ளி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வேளாண் சந்தை தற்காலிக ஒழுங்குமுறை விற்பனைக்கூடமாக செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சமவெளி பகுதி மொத்த வியாபாரிகள், விவசாயிகள் காய்கறிகள் வாங்கிச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், பீட்ரூட், முட்டைகோஸ் போன்ற இங்கிலீஸ் காய்கறிகள் எனப்படும் மலை காய்கறிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் பின் தற்போதும் தேயிலைக்கு அடுத்தபடியாக நீலகிரி மாவட்ட மக்களின் பிரதான தொழிலாகவும், பொருளதாரத்தை நிர்ணயிக்க கூடிய ஒரு அங்கமாகவும் காய்கறி விவசாயம் விளங்கி வருகிறது. மலை காய்கறிகள் சுமார் 7 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது.

The post குன்னூர் எடப்பள்ளி பகுதியில் வேளாண் சந்தை தற்காலிக ஒழுங்குமுறை விற்பனைக்கூடமாக செயல்பட அனுமதி சமவெளி பகுதி மொத்த வியாபாரிகள் வாங்கி செல்ல நடவடிக்கை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: