கிராமப்புறங்களில் தொழிற்சாலைகள் அமைச்சர் கே.என்.நேரு பிரசாரம்

மண்ணச்சநல்லூர் பூனாம்பாளையம் பகுதியில் திமுக வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பிரசாரம் செய்து பேசியதாவது: மண்ணச்சநல்லூர் வளர்ந்து வரும் நகரமாக மாறி வருகிறது. இந்நிலையில் சமயபுரம் மற்றும் மண்ணச்சநல்லூரை இணைத்து மாநகராட்சியாக வரவிருக்கிறது. இதனால் மண்ணச்சநல்லூரை சுற்றியுள்ள கிராமப்புற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு ஏற்படுத்த, கிராமப்புறங்களிலும் தொழிற்சாலைகளை அமைக்க ஒன்றிய, மாநில அரசுகளின் நிதியோடு திட்டங்கள் கொண்டு வரப்படும். தொழிற்சாலைகள் சார்ந்து மட்டும் அமையாமல் கிராமப்புற இளைஞர்களும் வேலைவாய்ப்பு பெற்று பயன்பெறும் வகையில் திட்டங்களை செயல்படுத்த நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். உங்களின் தேவைகளை நிறைவேற்றவும், நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க திமுக வேட்பாளர் அருண்நேருவுக்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

The post கிராமப்புறங்களில் தொழிற்சாலைகள் அமைச்சர் கே.என்.நேரு பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: