காலாவதியான பிஸ்கட் விற்ற மளிகை கடை மூடல்

சேலம், செப்.6: சேலம் கிச்சிப்பாளையத்தில் காலாவதியான பிஸ்கட் விற்ற மளிகை கடையை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பூட்டினர். சேலம் கிச்சிப்பாளையத்தில் காலாவதியான பிஸ்கட் விற்பதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் மேற்பார்வையில் உணவு பாதுகாப்பு அலுவலர் புஷ்பாராஜ் கிச்சிப்பாளையத்துக்கு சென்று அங்குள்ள மளிகை கடைகளில் சோதனை நடத்தினார். அப்போது ஒரு கடையில் காலாவதியான பிஸ்கட் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அந்த கடையில் இருந்த காலாவதியான பிஸ்கட் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அந்த கடை உரிமம் இல்லாமல் இயங்கியதும் தெரிய வந்தது. இதையடுத்து, அந்த மளிகை கடையை மூடினர். இதுதொடர்பாக கடையின் உரிமையாளருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், உரிமம் இல்லாமல் கடையை நடத்தினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். காலாவதியான பொருட்களை விற்றால் அபராதம் விதிக்கப்படும், என்றனர்.

The post காலாவதியான பிஸ்கட் விற்ற மளிகை கடை மூடல் appeared first on Dinakaran.

Related Stories: