காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி: அமைச்சர் தா.மோ அன்பரசன் தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம்: கொரோனா மற்றும் ஒமிகிரான் பரவலை தடுக்க 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மேலும் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் துவக்கி வைத்தார்.இதைதொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் ஒவ்வொரு வட்டாரத்திலும், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு சென்று தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடுப்பூசி தினமும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் செலுத்தப்படுகிறது. அதில் 15 முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு பள்ளிகள் மூலமாக செலுத்தப்படவுள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் சேக்கிழார் அரசு மேல்நிலைப்பள்ளியில்  ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் 149 மேல்நிலைப்பள்ளிகளில் 42 ஆயிரம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது.அப்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள சிறுவர்கள், தங்களது ஆதார் அட்டை, தந்தை அல்லது தாய் ஒருவரின் செல்போன் எண், 10ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழை அடையாள ஆவணமாக பயன்படுத்தி தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் கலெக்டர் ஆர்த்தி எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) டாக்டர் சித்திரசேனன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஸ்ரீ காஞ்சிபுரம் அடுத்த தாமல் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை எம்எல்ஏ எழிலரசன் துவக்கி வைத்தார். உடன் காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்விழி குமார், ஒன்றிய செயலாளர் பி எம் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்காஞ்சிபுரம் மாவட்டத்தில் 149 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தடுப்பூசி செலுத்துவதற்கான முகாம் அமைத்து, வகுப்பறையில் சுகாதாரத் துறையினர் தடுப்பூசி செலுத்தினர்.உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு தடுப்பூசி முகாம் துவக்க விழா நேற்று நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் உமாதேவி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகுமார், ஒன்றிய குழு உறுப்பினர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்றத் தலைவர் சத்தியா சக்திவேல் வரவேற்றார். காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தார். இதில், 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.சாலவாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மாணவ, மாணவிகளை பரிசோதனை செய்து தடுப்பூசி செலுத்த அனுமதித்தனர். இதேப்போல், உத்திரமேரூர் அரசினர் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஹேமலதா ஞானசேகரன், நகர செயலாளர் பாரிவள்ளல், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சசிகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன்  கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார். அப்போது, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது, அடிக்கடி கைகளை கழுவுவதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என பேசினார். இதில், மறைமலைநகர் நகர செயலாளர் ஜெ.சண்முகம், முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி: அமைச்சர் தா.மோ அன்பரசன் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: