காஞ்சிபுரத்தில் மாதத்தவணைக்கு வீட்டுமனை தருவதாக சுமார் ரூ.1.39 கோடி மோசடி: எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மாத தவணையில் பணம் செலுத்தினால் வீட்டு மனை தருவதாகக் கூறி மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காஞ்சிபுரம் எஸ்பி சுதாகரிடம் பாதிக்கப்பட்ட சுமார் 50 பேர் புகார் மனு அளித்தனர்.அந்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது:காஞ்சிபுரம் தேரடி பகுதியில் ஸ்ரீ பால குமரன் ரியல் எஸ்டேட் நிறுவனம் என்ற நிறுவனத்தை எம்.லட்சுமணன் என்பவர் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் சார்பாக மணிமங்கலம், சுமங்கலி, மேனநல்லூர், வெம்பாக்கம் மற்றும் மேச்சேரி உள்பட பல பகுதிகளில் வீட்டுமனை பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சுலபத் தவணை திட்டத்தில் இதை பெற்றுக் கொள்ளலாம் என 2008ம் ஆண்டு விளம்பரம் செய்யப்பட்டது. இதில், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் மாதம் ஆயிரம் மற்றும் 750 என இரு பிரிவுகளில் 66 மாதங்களில் சுமார் 212 பேர் சுமார் ரூ. 1.39 கோடி பணம் செலுத்தி உள்ளோம்.தவணைக்காலம் முடிந்தம் வீட்டு மனை பிரிவை பத்திரப்பதிவு செய்யாமல் பல்வேறு காரணங்கள் கூறி காலம் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் காலம் தாழ்த்தி வந்தனர். வாடிக்கையாளர்கள் இதுகுறித்து அலுவலகத்தில் சென்று கேட்டபோது அலுவலக ஊழியர்கள் முறையற்ற பதிவுகள் கூறியும் தகாத வார்த்தைகள் கூறியும் வெளியேற்றுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட சுமார் 50க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்மணி கூறுகையில், ‘தற்போது செலுத்திய பணம் கொடுத்தால் கூட நிம்மதி அடைவேன்’ என்றார்….

The post காஞ்சிபுரத்தில் மாதத்தவணைக்கு வீட்டுமனை தருவதாக சுமார் ரூ.1.39 கோடி மோசடி: எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு appeared first on Dinakaran.

Related Stories: