களைகட்டும் பொங்கல் பானை விற்பனை

திருப்போரூர்: ஆண்டுதோறும் தை முதல்நாள் பொங்கல் பண்டிகையின்போது புதிய பானையில் பொங்கலிட்டு, சூரியனுக்கு நன்றி செலுத்தும் நிகழ்வை விவசாய தொழிலை மையமாகக் கொண்ட தமிழினம் சிறப்புற கொண்டாடுகிறது. அதேபோல் பழைய பொருட்களை தீயிட்டு எரிக்கும் போகி பண்டிகையும் பொங்கலுக்கு ஒருநாள் முன்னதாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, கிராமங்களில் புதிய மண் பானை மற்றும் போகி மேளம் விற்பனை சூடு பிடித்தது. சிறிய ரக பானை ₹20 முதல் பெரிய அளவிலான பானை ₹100 வரை விற்பனையானது. இந்த விற்பனை இன்று அதிகரிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.போகி மேளம் ₹50, ₹75 என 2 விதங்களில் விற்கப்பட்டது. பிளாஸ்டிக்கால் ஆன மேளங்கள் விற்பனையில் கிடைத்தாலும், போகி நேரத்தில் மண் வளையம், தோல் ஆகியவற்றால் இயற்கையாக செய்யப்பட்ட மேளத்துக்கு இன்னும் மவுசு குறையவில்லை. பொங்கல் தினத்தின் மறுநாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப் பயன்படும் மாடுகளுக்கான பிடிகயிறு, கழுத்துக் கயிறு, மூக்கணாங்கயிறு ஆகியவற்றின் விற்பனையும் விறுவிறுப்புடன் நடந்தது….

The post களைகட்டும் பொங்கல் பானை விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: