அருமனை , ஜூலை 17 : களியல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் மற்றும் இலக்கிய மன்ற துவக்க விழா நடைபெற்றது, பள்ளி தாளாளர் அருட்தந்தை மாத்துக்குட்டி அரேக்களம் தலைமை வகித்து மாணவர்களிடையே உரையாற்றினார். தலைமை ஆசிரியர் அருட்தந்தை தேவசியா ஜோசப் முன்னிலை வகித்தார். மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் ஆசிரியர்கள், ஊழியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.
அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளிகளியக்காவிளை: களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. விழாவில் பெற்றோர் ஆசிரியா் கழக தலைவா் மாகீன் அபுபக்கா் தலைமை வகித்தார். தலைமையாசிரியை ரெஜனி, ஆசிரியை மினி சந்திரா, கிராம கல்விக் குழுத் தலைவா் சுரேஷ்குமார், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி நயிமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை லேகா வரவேற்றார். காமராஜரின் சிறப்புகள் குறித்து களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ், மேக்கோடு அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஜெயராஜ், ஓய்வு பெற்ற ஆசிரியா் ஞானதாஸ் ஆகியோர் பேசினர். தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினார். முன்னதாக காமராஜா் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
The post கல்வி வளர்ச்சி நாள் மரியன்னை மேல்நிலைப் பள்ளி appeared first on Dinakaran.