கல்வி துறைக்கு ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து பள்ளி ஆசிரியர் மன்றம் தீர்மானம்

கூடலூர் :  நீலகிரி மாவட்டம் கூடலூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில விரைவு செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அருண்குமார் வரவேற்று பேசினார்.பொருளாளர்  கணேசன், துணை பொது செயலாளர் ரவி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.மாநில பொது செயலாளர் தியோடர் ராபின்சன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து மாநில பொது செயலாளர் தியோடர் ராபின்சன் நிருபர்களிடம்  தமிழக அரசு பள்ளி கல்வி துறை மூலம் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கபட்டு வருகிறது. குறிப்பாக இந்த நிதிநிலை அறிக்கையில் 35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் நன்றி தெரிவிக்கின்றோம். ஆசியர்களுக்கு சம வேலை, சம ஊதியம் வழங்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை  உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வரின் முத்தான திட்டமான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல வேறு திட்டங்களுக்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற செயற்குழு வாழ்த்துகிறது என தெரிவித்தார்….

The post கல்வி துறைக்கு ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து பள்ளி ஆசிரியர் மன்றம் தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: