கலைஞர் பெயரில் திரைத்துறை வாரியம்: திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. தலைவர் முரளி ராமசாமி தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் எஸ்.கதிரேசன், ஆர்.கே.சுரேஷ், செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், பொருளாளர் எஸ்.சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தியேட்டர்களின் டிக்கெட் விற்பனையை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும். கியூப், யுஎப்ஓ உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்கள், தயாரிப்பாளர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும். தயாரிப்பாளர்களுக்கு தமிழக அரசு வழங்கி வரும் மானியத்தொகையை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும். பையனூரில் அமைந்து வரும் திரைப்பட நகரில், தயாரிப்பாளர்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட 10 ஏக்கர் நிலம் கொடுக்க வேண்டும். முன்னாள் தமிழக முதல்வர் கலைஞரின் நினைவைப் போற்றும் வகையில், ‘டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி திரைத்துறை வாரியம்’ அமைக்க வேண்டும். தயாரிப்பாளர் சங்கத்துக்கு சொந்தமாக அலுவலகம் கட்டிக்கொள்ள சென்னையில் இடம் தரவேண்டும். இனி 2 படங்கள் தயாரித்து, அதை குறைந்தபட்சம் 25 தியேட்டர்களில் வெளியிட்டவர்கள் மட்டுமே சங்க நிரந்தர உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்….

The post கலைஞர் பெயரில் திரைத்துறை வாரியம்: திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: