கரூர், ஜூன். 18: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்னாண்டாங்கோயில் சாலையோரம் கொட்டிக் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். கருர் மாநகராட்சிக்குட்பட்ட சின்னாண்டாங்கோயில் பகுதியின் வழியாக கரூர் மதுரை பைபாஸ் சாலைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் இந்த சாலையில் செல்கிறது. மேலும், இந்த சாலையோரம் அதிகளவு குடியிருப்புகளும் வர்த்தக நிறுவனங்களும் உள்ளன. இந்நிலையில், இந்த சாலையோரம் அவ்வப்போது பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகிறது.
இந்த கழிவுகள் அகற்றாத காரணத்தினால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. எனவே, இதுபோன்ற கழிவுகள் கொட்டப்பட்ட உடனேயே அங்கிருந்து உடனடியாக அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி அதனை அந்த பகுதியில் இருந்து அகற்றவும், இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
The post கரூர் சின்னாண்டாங்கோயில் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளால் தொற்றுநோய் அபாயம் appeared first on Dinakaran.
