கரூரில் இருந்து குளித்தலை வரை பிஎஸ்என்எல்: தகவல் பரிமாற்றத்தில் சிறப்பான சேவை கிடைக்கும்

கரூர், ஜூலை 7: கரூரில் இருந்து குளித்தலை வரை பிஎஸ்என்எல் கேபிள் பதிக்கும் பணி ரூ.4 கோடியில் தீவிரமாக நடைபெற்றது. இதனால் கிராமங்களுக்கும் நெட் சேவை விரைவாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று உலகம் முழுதும் தகவல் தொழில்நுட்பத்தில் விண்ணைத் தொடும் அளவிற்கு பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் அடிப்படையில் இந்தியா முழுவதும் தகவல் தொழில்நுட்ப துறையில் கால் பதித்துள்ள தனியார் நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக தகவல் தொழில்நுட்பத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து உச்சத்தில் உள்ளது. இந்நிலையில் தற்போது பிஎஸ்என்எல் நிறுவனமும் தகவல் தொழில்நுட்பத்தில் மற்றொரு அங்கமாக ஆப்டிமம் பைபர் கேபிள் கரூர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆப்டிமம் பைபர் கம்யூனிகேஷன் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மிகவும் துல்லியமாக ஒளியின் துடிப்புகளை அனுப்பும் ஒரு செயலியாகும்.
இதன்படி பைபர்-ஆப்டிக் கம்யூனிகேஷன் என்பது ஆப்டிகல் ஃபைபர் மூலம் அகச்சிவப்பு அல்லது புலப்படும் ஒளியின் துடிப்புகளை அனுப்புவதன் மூலம் தகவல்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பும் முறையாகும். ஒளி என்பது கேரியர் அலையின் ஒரு வடிவமாகும், இது தகவல்களை எடுத்துச் செல்ல மாற்றியமைக்கப்படுகிறது .

ஆப்டிகல் ஃபைபர் பல தொலைத்தொடர்பு நிறுவனங்களால் தொலைபேசி சமிக்ஞைகள், இணையத் தொடர்பு மற்றும் கேபிள் தொலைக்காட்சி சமிக்ஞைகளை அனுப்புவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.பெல்லேப்ஸின் ஆராய்ச்சியாளர்கள் ஃபைபர்-ஆப்டிக் தகவல்தொடர்புகளைப் பயன்படுத்தி ஒரு வினாடிக்கு 100 பெட்டாபிட் கிலோ மீட்டர்களுக்கு மேல் அலைவரிசை-தொலைவு தயாரிப்பை அடைந்துள்ளனர். இம்முறைப்படி கரூர் மாவட்டத்தில் கரூர் முதல் குளித்தலை வரை முதல் கட்டமாக ஆப்டிமம் ஃபைபர் கேபிள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பூமியில் கீழ் சுமார் 8 அடி ஆழத்திற்கு குழி எடுத்து அதன் உள்ளே ஆப்டிமம் பைபர் கேபிள் அமைப்பதற்காக பணி நடைபெற்று வருகிறது. ஆப்டிமம் பைபர் கேபிள் அமைப்பதால் கிடைக்கும் நன்மை குறித்து பொறியாளர் தெரிவித்ததாவது:, ஆப்டிமம் பைபர் கேபிள் அமைப்பதால் (இன்டர்நெட்) நெட் லைன் விரைவாக கிடைக்கும். இதனால் தகவலை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக அனுப்புவதுடன் டவுன்லோட் செய்யும் போதும் எளிதாக அமையும். குறிப்பாக கிராமப்புறத்தில் வரும் ஊராட்சிகளுக்கு இல்லம் தேடி சேவை திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் இதன் வாயிலாகிய இணைப்புகள் வழங்கப்படும். மேலும் மாவட்டத்திலுள்ள அனைத்து சித்தூர் ஆட்சிகளுக்கும் வைஃபை லைன் இதன் மூலமாகவே இணைக்கப்படும். இதனால் பொதுமக்கள் தகவல் பரிமாற்றத்தில் சிறப்பான சேவை கிடைக்க வாய்ப்புள்ளது. தற்போது பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தி உள்ளது 4ஜி என்ற போதிலும் மற்ற நெட்வொர்க்கை காட்டிலும், இது விரைவாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post கரூரில் இருந்து குளித்தலை வரை பிஎஸ்என்எல்: தகவல் பரிமாற்றத்தில் சிறப்பான சேவை கிடைக்கும் appeared first on Dinakaran.

Related Stories: