கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி

கந்தர்வகோட்டை, ஜூலை 31: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் வட்டார வள மையத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட தன்னார்வலர்களுக்கான பயிற்சி கந்தர்வக்கோட்டை வட்டார வளமையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிவிற்கு வட்டாரக் கல்வி அலுவலர் தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) சுரேஷ்குமார் ஒருங்கிணைத்தார். ஆசிரியர் பயிற்றுநர் பாரதிதாசன் அனைவரையும் வரவேற்றார். வட்டாரக் கல்வி அலுவலர் இர்ஷாத் அகமது, இல்லம் தேடிக் கல்வித் திட்ட ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். புதிய பாரத எழுத்தறிவு திட்ட பயிற்சியில் முயற்சியும் மூலதனமும், எண்கள் அறிவோம், வாழ்வியலும் ஆளுமையும், இயற்கையோடு இணைவோம், உள்ளங்கையில் விஞ்ஞானம், ஊரும் ஏரும்,ஒளவையும் நெல்லிக்கனியும், நூலகப் பூக்கள், கிரந்த எழுத்துக்கள் அறிமுகம், சட்டமும் திட்டமும் அறிவோம்,

இலவச கல்வி உரிமைச் சட்டம் 2009, போக்சோ சட்டம் 2012, பாலியல் தொல்லைகள் தடுப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் 2013, குழந்தை திருமணம் தடுப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், பெட்ரோல் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நல சட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய திட்டம், இந்திரா காந்தி தேசிய பதவிகள் ஓய்வூதிய திட்டம், வாக்களிப்பது நமது கடமை, காலம் கடிகாரம் பார்த்த நேரம் கூறுதல், நம் தொழில் நம் வளர்ச்சி பசுமை தோட்டம், உடல் நலம் காப்போம், சரிவிகித உணவின் தேவை, எளிய உடற்பயிற்சி, எளிய மூச்சு பயிற்சி, கை பயிற்சி, கால் பயிற்சி, கண் பயிற்சி,

புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள், இணைய வழி சேவை மற்றும் பணமில்லா பரிமாற்றம், வங்கிக் காசோலை, வங்கியில் பணம் செலுத்துதல் மற்றும் எடுத்தல் படிவங்களை நிரப்புதல், பேரிடர் மேலாண்மை, கனமழை வெள்ளம் பாதுகாப்பு முறைகள், மின்னல் மற்றும் இடி, வறட்சி, மனிதனால் ஏற்படும் பேரிடர்கள் மற்றும் பாதுகாப்பு முறைகள், சாலை விபத்துகள், ஆழ்துளை கிணறு விபத்து, தீ விபத்து, மின் விபத்துக்கள், முதலுதவி, சாலை பாதுகாப்பு முதலுதவி, அஞ்சலக சேமிப்பு வங்கி, அவசர கால தொலைபேசி எண்கள், ஒருங்கிணைந்த பண விடை, சாதனைப் பெண்கள் சௌமியா சுவாமிநாதன், சின்னப்பிள்ளை, முத்துலட்சுமி, பேபி சுந்தராம்பாள், தூய்மை பாரதம் மற்றும் கிராம சபை, கடிதம் எழுதுதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சிகள் நடைபெற்றது. கருத்தாளராக ஆசிரியர் பயிற்றுநர் பாரதிதாசன், தலைமையாசிரியர் கிருஷ்ணவேணி ஆகியோர் செயல்பட்டனர். தன்னார்வலர்களுக்கு புதிய பாரத எழுத்தறிவு திட்ட கற்போர் பெட்டகம் வழங்கப்பட்டது. சிறப்பாசிரியர் அறிவழகன் நன்றி கூறினார்.

The post கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: