கத்திரி விளைச்சல் பாதிப்பு

 

போச்சம்பள்ளி, ஏப்.27: போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் கத்திரி, வெண்டை, முள்ளங்கி, தக்காளி உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகளை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். குள்ளம்பட்டி கிராமத்தில் விளைவிக்கப்படும் கத்திரிகாயை கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். இதனால் விவசாயிகள் நல்ல வருவாய் ஈட்டி வந்தனர். இந்நிலையில் கடும் வெயில் காரணமாக, இப்பகுதியில் கத்திரி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. செடி மற்றும் காய்களை பூச்சி மற்றும் புழுக்கள் தாக்கியதால் கத்திரிகாய்கள் அனைத்தும் வீணாகி உள்ளது. இதனால் விவசாயிகள் கத்திரிகாயை பறிக்காமல் செடிகளில் விட்டுள்ளனர். இதுகுறித்து விவசாயி கந்தன் கூறுகையில், ‘5 ஏக்கரில் கத்திரி செடி சாகுபடி செய்தேன். நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்த கத்திரிக்காயில், புழுக்கள் மற்றும் பூச்சி தாக்குதல் ஏற்பட்டதால் அறுவடை செய்ய முடியவில்லை. மருந்து அடித்தும் பலனில்லை. 3 மாத பயிரான கத்திரியை, கடந்தாண்டு பயிரிட்டு நல்ல வருவாய் கிடைத்ததால், மீண்டும் சாகுபடி ெசய்தோம். இந்தாண்டு கத்திரி செடி மற்றும் காயை பூச்சி, புழுக்கள் தாக்கியதால் இழப்பு ஏற்பட்டுள்ளது,’ என்றார்.

The post கத்திரி விளைச்சல் பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: