கணவர் இறந்த 116வது நாளில் மனைவிக்கு கருணைப் பணி தமிழக அரசுக்கு பாராட்டு

மதுரை, செப். 19: மதுரையில் பணியில் இருந்த அரசு ஊழியர் மாரடைப்பால் கடந்த மே மாதம் உயிரிழந்தார். இந்த மரணம் நடந்து 116வது நாளில், அவரது மனைவிக்கு கருணை அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு அவரது குடும்பத்தினர் நன்றிகள் மற்றும் பாராட்டுதல்களை தெரிவித்துள்ளனர். மதுரை செய்தி மக்கள் ெதாடர்பு அலுவலகத்தில் வாகன சீராளராக பணியாற்றியவர் வெங்கடேசன். இவர் கடந்த மே 25ம் தேதி திடீரென மாரடைப்பால் இறந்தார். இதையடுத்து வேறு வருமானமின்றி அவரது குடும்பத்தினர் சிரமப்பட்டனர். இதனால், தனது கணவரின் பணியை தனக்கு கருணை அடிப்படையில் வழங்க வேண்டுமென, அவரது மனைவி சித்ராதேவி, தமிழ்நாடு அரசிடம் விண்ணப்பித்திருந்தார். அவரது மனுவை கருணையுடன் பரிசீலித்த செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இதுகுறித்து அரசின் கவனத்திற்கு ெகாண்டு சென்று மேல் நடவடிக்கைக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து அவரது கணவர் வகித்த அதே பணி அவரது மனைவிக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணி நியமன ஆணையை, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று வழங்கினார். தற்போது வாகன சீராளர் பணியைப் பெற்றுள்ள சித்ராதேவியின் கணவர் வெங்கடேசன் இறந்து 116வது நாளில் அவருக்கு கருணைப் பணி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மறைந்த வெங்கடேசன் குடும்பத்தினர் தமிழக அரசுக்கு நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

The post கணவர் இறந்த 116வது நாளில் மனைவிக்கு கருணைப் பணி தமிழக அரசுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: