கடமலைக்குண்டு அருகே இரட்டை மாட்டுவண்டி பந்தயம்: எம்எல்ஏ மகாராஜன் துவக்கி வைத்தார்

வருசநாடு: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தின விழாவை முன்னிட்டு, கடமலைக்குண்டு அருகே குமணன்தொழு கிராமத்தில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தை ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் தொடங்கி வைத்தார். இதில், தேன்சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான், பெரியமாடு ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், கடமலை-மயிலை ஒன்றிய திமுக செயலாளர்கள் வக்கீல் சுப்பிரமணி, தங்கப்பாண்டி, திமுக ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர் பிரபாகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் மச்சக்காளை, கருப்பையா, உமாமகேஸ்வரி வேல்முருகன், வழக்கறிஞர் பிரிவு வக்கீல் பாஸ்கரன், திமுக கிளை செயலாளர் ஜெயபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திமுக இளைஞரணி பொறுப்பாளர் பிரபாகரன் கூறுகையில், ‘உதயநிதி ஸ்டாலின் பிறந்த தின விழாவையொட்டி, இரட்டை மாட்டு பந்தயம் நடத்தினோம். இதில், மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேக்ளா ரேஸ் வண்டிகளும் கொண்டன. இதனால், மகிழ்ச்சி அடைந்தோம்’ என்றார்….

The post கடமலைக்குண்டு அருகே இரட்டை மாட்டுவண்டி பந்தயம்: எம்எல்ஏ மகாராஜன் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: