ஓமலூர், காடையாம்பட்டியில் கோடை சாகுபடி பணிகள் தீவிரம்

ஓமலூர் : கோடை கால மழை பெய்து வருவதால், காய்கறி மற்றும் தானிய சாகுபடிக்கான பணிகளை ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரப்பகுதி விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய சுற்று வட்டாரப்பகுதிகளில், கடந்த சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. தற்போது பெரும்பாலான பகுதிகளில் சாகுபடி செய்த பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. கோடை காலத்தில், அதிக வெயில் காரணமாக, செடிகள் முளைப்பு, வளர்ச்சி பாதிப்பது, தண்ணீர் பற்றாக்குறை, நோய்தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால், கோடை சீசனில், விளைநிலங்களில் சாகுபடி இருக்காது. ஆனால், நடப்பாண்டு கோடை வெப்பம் தெரியாத அளவுக்கு, மழை பெய்து வருகிறது. எனவே, தற்போதே, விளைநிலங்களில், சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக வேளாண்மை துறை அதிகாரிகள் களத்தில் இறங்கி, விவசாயிகளுக்கு உதவி செய்து வருகின்றனர். இதற்காக உழவு செய்த விளைநிலங்களில், வாய்க்கால், வரப்பு அமைத்தல் உள்ளிட்ட பணிகளை துவக்கியுள்ளனர். தொடர்ந்து, காய்கறி சாகுபடிக்கு, நாற்று நடுதல், தானிய சாகுபடிக்கு விதைப்பு செய்தல் ஆகிய பணிகளை விவசாயிகள் செய்து வருகின்றனர். குறுகிய கால பயிர்களான கீரை விதைப்பு, கால்நடை தீவனப் பயிர்கள், வறட்சியை தாங்கி சோளம், கம்பு ஆகிய பயிர்களை மானாவாரியாக விதைக்கும் பணிகளையும் செய்து வருகின்றனர். …

The post ஓமலூர், காடையாம்பட்டியில் கோடை சாகுபடி பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: