ஒன்றிய, மாநில அரசுகள் உரிய கமிட்டியை அமைத்துபென்ஷன் உயர்வை அமல்படுத்த வேண்டும்

குளித்தலை, ஜூலை 7: ஒன்றிய, மாநில அரசுகள் உரிய கமிட்டியை அமைத்து பென்ஷன் உயர்வை அமல்படுத்த வேண்டும் என்று குளித்தலை மின்வாரிய பென்சனர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூர் மாவட்டம் குளித்தலை மின்வாரிய பென்சனர் சங்க ஐந்தாம் ஆண்டு துவக்க விழா மற்றும் பேரவை கூட்டம் குளித்தலை வைகைநல்லூர் அக்ரஹாரம் தனியார் மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு குளித்தலை மின்வாரிய பென்சனர் சங்க துணைத் தலைவர் இன்ஜினியர் பழனிவேலு தலைமை வகித்தார். சங்க கொடியை சங்க தணிக்கையாளர் பழனியாண்டி ஏற்றி வைத்தார். சங்கத் தலைவர் பொன்னம்பலம் விழா ஒரு ங்கிணைப்பு செய்திருந்தார். துணைச் செயலாளர் இன்ஜினியர் கண்ணன் சங்க ஆண்டு அறிக்கை மற்றும் தீர்மானங்கள் வாசித்தார். சங்கப் பொருளாளர் மகாலிங்கம் நிதிநிலை அறிக்கை வாசித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக அரசு தலைமைச் செயலக சங்க தலைவர் வெங்கடேசன், தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாநில தலைவர் மாணிக்கம், பொதுச் செயலாளர் முத்துக்குமார வேலு, திருச்சி மண்டல தலைவர் டெஸ்மா மாணிக்கம் ராமசாமி, ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தலைவர் சுந்தரமூர்த்தி மாணிக்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு ஏற்ப 6 மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்படும் பஞ்சப்படி உயர்வை தமிழக அரசும், தமிழ்நாடு மின்சார வாரியமும் அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்தே நிலுவைகள் எதுவும் இன்றி தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும்.1.1.2016ல் உயர்த்தப்பட்ட பென்ஷன் உயர்வு வரும் 31. 12 .2025ல் 10 ஆண்டுகள் முடிவடைகிறது என்பதால், 1.1.2026 ல் பென்ஷன் உயர்வு வழங்கப்பட வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகள் உரிய கமிட்டியை விரைவாக அமைத்து கமிட்டியின் பரிந்துரைகளை பெற்று 1.1.2026 முதல் பென்ஷன் உயர்வை அமல்படுத்த வேண்டும். பென்சன் நிதியை ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் ஆக உய ர்த்தி வழங்க வேண்டும்.
2023 ம் ஆண்டுக்குப் பிறகு வாரிய பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் சங்க செயலாளர் நரசிங்கம் நன்றி கூறினார்.

The post ஒன்றிய, மாநில அரசுகள் உரிய கமிட்டியை அமைத்துபென்ஷன் உயர்வை அமல்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: